கிரிக்கெட் வீரர் நடராஜனை தமிழ்நாடு அணியிலிருந்து விடுவிப்பு!!

     -MMH

     தமிழக வீரர் நடராஜனை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் விடுவிக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்ததையடுத்து அவரை தமிழ்நாடு அணியிலிருந்து விடுவித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் மூன்று இருபது ஓவர் போட்டிகள், ஒரு டெஸ்ட் மற்றும் 1 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தில் நடராஜன் ரசிகர்களின் மனதை கவர்ந்ததுடன், தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

இதனையடுத்து நாடு திரும்பிய அவருக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அவர் விரைவில் தொடங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி தொடருக்கான தமிழக அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் பணி சுமை காரணமாக அவரை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் கோரிக்கை வைத்திருக்கிறது.

சூழ்நிலையை உணர்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் இருந்து விடுவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்ததும் தொடர்ந்து 5 , 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் விளையாட இருப்பதால் அந்த தொடருக்கு நடராஜன் மிகவும் முக்கியமான வீரராக இருக்கவேண்டும் என்பதால், பணிச் சுமையைக் குறைக்கும் விதமாக அவரை விடுவிக்குமாறு கேட்டுள்ளது.

அதேபோல அவர் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சிக்கு செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments