ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து!

-MMH

     முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மக்களுக்கு சாதகமான பல திட்டங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக, தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, மொத்தம் 26,460 பேர்கள் மீதான 308 வழக்குகள் ரத்து செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வழக்குகளில் காவலர்கள் மீது தாக்குதல், தீ வைப்பு உள்ளிட்ட சட்டபூர்வமாக திரும்ப பெற இயலாத வழக்குகளை தவிர, பிற வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments