கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தீ பற்றி எரிந்த பைக்...! கண்ணீர் விட்டு அழுத இளைஞர்!

 

-MMH

     சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பைக் ஒன்று தீ பற்றி எரிந்ததில் நூலிழையில் இளைஞர் ஒருவர் உயிர் தப்பினார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஐசக் என்பவர் 5 வருடங்களுக்கு முன்பு கே.டி.எம் 200 ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ஒரு வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியின் இன்ஜீன் பழுதடைந்து விட்டதால் வீட்டிலேயே நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் , தன் பைக்கை பழுது பார்க்க கருதிய ஐசக், அதனை ஷோரும் சென்று கொடுத்துள்ளார். சுமார், ரூ. 60,000 செலவழித்து பைக்கை ரிப்பேர் பார்த்ததாக சொல்லப்படுகிறது. பழுது பார்த்த பிறகு, ஐசக் பைக்கை வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அடுத்த நாளே, பைக் மீண்டும் பழுதடைந்துள்ளது.

இதனால், ஐசக் மீண்டும் பைக்கை பழுது பார்க்க கொண்டு சென்றுள்ளார். அங்கே, ஒன்றும் பிரச்னையில்லை என்று கூறி, பைக் மீது தண்ணீர் அடித்து கழுவி விட்டுள்ளனர். பின்னர், இளைஞர் ஐசக் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பைக் சறுக்கி கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் பைக் தீ பற்றி எரிந்து கரி கட்டையானது. தன் முன்னே பைக் எரிவதை கண்டு இளைஞர் கண்ணீர் விட்டு அழுதார். தி. நகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கோடம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இளைஞர் ஐசக்கிடத்தில் சம்பவம் குறித்து கேட்ட போது, என்னால் இப்போது எதுவும் கூற முடியாமல் இருக்கிறேன் என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ருக்மாங்கதன் சென்னை.

Comments