திருப்பத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்!! இன்று உரையாற்றுகிறார்!!

 

     -MMH

தமிழகம் முழுவதும் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" எனும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். திமுக ஆட்சி அமைந்ததும், தான் முதல்வராகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள வைரவன்பட்டியில் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் பேசுகிறார். இதற்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை காண டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வழங்க 150 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ செய்துள்ளார்.

- ராயல் ஹமீது, சிங்கம்புனரி.

Comments