கம்பத்தில் சிஐடியு ஆட்டோ ஓட்டுனர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!!

 

-MMH

     ம்பத்தில் சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.காவலர்கள் பேச்சுவார்த்தை. தேனி மாவட்டம் கம்பத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, தெற்கு காவல் நிலைய காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் வேலப்பர் கோவில் காந்திஜி  வீதி தெருவில் தனியார் மருத்துவமனை வளாகம் முன்பாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்டோ நிலையம் பெயர் பலகை வியாழக்கிழமை வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனை மருத்துவர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஆட்டோ சங்கர் பெயர்ப்பலகை அகற்றி தருமாறு புகார் செய்தார்.

காவலர்கள் ஆட்டோ தொழிலாளர் சங்க பேரவையின் பெயர்பலகையை அகற்ற வரும்பொழுது 50 கற்கும்  மேலான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ வாகனங்கள் வேலப்பர் கோவில் வீதியை முற்றுகையிட்டனர். சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்க ஏரியா தலைவர் கே.ஆர்.லேனின்,  செயலாளர் ஐ.பாலகுருநாதன், சி.பி.எம். ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் ஆட்டோ தொழிலாளர்கள் பெயர் பலகையை அகற்றக் கூடாது என்று கோஷமிட்டனர், பெயர் பலகை அருகில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ். கீதா ஆட்டோ தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்பு ஆட்டோ தொழிலாளர்கள் பெயர் பலகையை அருகே உள்ள இடத்தில் மாற்றி அமைக்க சம்மதித்தனர். பரபரப்பான காந்திஜி வீதியில்  சுமார் இரண்டு மணி நேரம் ஆட்டோ ஓட்டுனர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

Comments