வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் பாலுசாமி உடலுக்கு கலெக்டர் அஞ்சலி...!

     -MMH

 சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலுசாமி உடலுக்கு மாவட்ட கலெக்டர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார்.

சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் மாவோயிஸ்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி) படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் சோனேபூர் காவல் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நக்சல்கள் வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் வீரர் எல்.பாலுச்சாமி இறந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்தார். 

அதேபோல், சோன்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள குகூர் கிராமத்திற்கு அருகே போலீஸ் குழுக்கள் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காங்கர் உசெண்டி என்ற வீரர் இறந்தார்.சத்தீஷ்கரில் நக்சல்களின் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பாலுச்சாமி மதுரை அழகர்கோவில் அருகில் உள்ள பொய்கரைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலுச்சாமி, இந்தோ – திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 

2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீர மரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களுர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பொய்கரைப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு கலெக்டர் அன்பழகன் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை குடும்பத்தினருக்கு வழங்கினார். பாலுசாமி வீர மரணம் அடைந்ததையொட்டி அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

  - கிரி,ஈஷா .

Comments