தமிழக சட்டமன்ற தேர்தல்- அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்.!!

     -MMH

     வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விருப்ப மனுக்கள்  காலை 10 மணி முதல் மாலை 5 வரையில் பெறப்படும் என்றும் இந்த மனுக்கள் இன்று முதல் அடுத்த மாதம் 5-ந்தேதிவரை பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.. விருப்பமனு விநியோகத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களை ஓ.பன்னீர் செல்வமும் வழங்கினர்.

முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments