உண்டியல் வசூல் எண்ண முடியாமல் சோர்ந்து போன ஊழியர்கள்!!

     -MMH
      பொதுவாக திருப்பதியில் தான் உண்டியல் வசூல் மிக அதிகமாக இருக்கும் என கூறப்படுவது உண்டு. ஆனால் திருப்பதியை விட அதிகமாக எண்ண முடியாத அளவிற்கு பணக்கட்டுகள் குவிந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

ராஜஸ்தான்மாநிலத்தில் உள்ள சித்தோர்கார் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில் ஸ்ரீ சன்வாலிய சேத். இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தைய தினத்தில் உண்டியல் பணத்தை எண்ணுவதை அந்த கோயிலின் நிர்வாகிகள் வழக்கமாகக் கொண்டனர்

அந்த வகையில் சமீபத்தில் கோவில் உண்டியல் பணத்தை எண்ணியபோது கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து நிர்வாகிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

உண்டியல் எண்ணும் பணியில் இருந்த ஊழியர்கள் ஒருநாளில் எண்ண முடியாத நிலையில் மறுநாளும் எண்ணப்பட்டது. ஊழியர்களும் சோர்ந்து போனதாக தெரிகிறது. இதனை அடுத்து முதல் நாளில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமாக ரொக்கம் இருந்ததாகவும் இதுபோக தங்கமும் வெள்ளியும் உண்டியலில் இருந்ததாகவும் தெரிகிறது. ஒரே மாதத்தில் திருப்பதி கோயிலை விட மிக அதிகமாக உண்டியல் பணம் வசூல் ஆன செய்தியால் அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

-கார்த்திகேயன், தண்டையார்பேட்டை.

Comments