திருமணிமுத்தாறு நீர் பாசனத் திட்டத்தை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை!!

 

-MMH 

     திருமணிமுத்தாறு நீர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாநகர செயலாளர் தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணிமுத்தாறு, காவிரி ஆறு வழித்தடங்களை இணைக்க வலியுறுத்தி  திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டியிலிருந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது ஈஸ்வரன் மற்றும் அவருடன் நடைபயணம் மேற்கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினரை திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து கோவை வரதராஜபுரம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் கோவை கிழக்கு மாநகர செயலாளர் தனபாலன் பேசுகையில், கொங்குநாடு பகுதியில் நீர் பாசனத் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் திருமணிமுத்தாறு நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபயணத்தை தொடங்கிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். 

மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு திருமணிமுத்தாறு நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார் . மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாநகர செயலாளர் R.S. தனபால், தலைமை நிலைய  செயலாளர் வடிவேல், துணைத் தலைவர் பொன்னுசாமி, தொழிற்சங்க தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி செயலாளர் N.கிருஷ்ணவேணி தலைவி சூரியகலா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

-சீனி,போத்தனூர்.

Comments