காற்று மாசில்லா போக்குவரத்தை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்!!

-MMH

காற்று மாசில்லா போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் மக்களின் பசுமை போக்குவரத்திற்கான வாகன அணிவகுப்பை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில்  துவக்கி வைத்தார். காற்று மாசு இல்லாத சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும் வகையிலும், இயற்கையை பாதுகாக்கும் விதமாகவும் பல்வேறு நாடுகளில் மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீக்கிய மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில்  சார ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் மூன்று சக்கர சரக்கு வாகனங்களை பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் ஈரோடு சாலை பஜனை கோவில் வீதியில் உள்ள சீக்கிய மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஷோரூமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் காற்று மாசு இல்லாத மக்களின் பசுமை போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் வாகன அணிவகுப்பையும் அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சி.கே மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சந்திரசேகர் மற்றும் இணை நிர்வாக இயக்குனரான கிருஷ்ண குமார் முன்னிலை வகித்தனர்.

-சீனி போத்தனூர்.

Comments