தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சியாளருக்கு விருது!!

     -MMH
      தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சியாளருக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த 1986ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வரும் இவர்,கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளை சிறந்த கராத்தே வீர்ர்களாக உருவாக்கி உள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற கராத்தே வீரர்,வீராங்கனைகள் பலர் தேசிய,சர்வதேச அளவுகளில் பல்வேறு கராத்தே போட்டிகளில் வென்று சாதனைகள் புரிந்துள்ளனர். 

இந்நிலையில் கராத்தே கலையில் இவரது சாதனையை பாராட்டியும்,கராத்தே  கலையை  மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்த்தமைக்காக தமிழக அரசின் சார்பில் ''கராத்தே கலையில் தலைசிறந்த பயிற்சியாளருக்கான பட்டத்தை தமிழக முதல்வர் பயிற்சியாளர் கார்த்திகேயனுக்கு வழங்கி கவுரவித்துள்ளார். 

தமிழகத்தில் முதன் முறையாக இந்த விருதை பெற்ற இவருக்கு கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முத்துராஜ்,தேவராஜ் உட்பட கராத்தே பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விருது வாங்கிய கார்த்திகேயன் கூறுகையில்: "விளையாட்டு துறையில் தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு பல்வேறு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது.  கோவையை சேர்ந்த நான் விருது பெற்றதற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்."

தமிழகத்திலேயே கராத்தே கலையில் சிறந்த பயிற்சியாளர் என்ற பட்டம் கோவையை கார்த்திகேயனுக்கு தான் முதல் முதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments