மாநகராட்சியின் மெத்தனம்! நோய் பரவும் அபாயம்!!

-MMH 

     லகின் மிகப்பழமையான நகராட்சியான சென்னை மக்கள் தொகை பரவலுக்கு பின் மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி என தனது எல்லைகளை அருகிலிருக்கும் கிராமம் , ஊர் என பலவற்றை உள்வாங்கிக்கொண்டு உருமாறியிருக்கின்றது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அநேக கட்டமைப்புகளையே ஒப்பேற்றி இன்றுவரை காலத்தை ஓட்டிவருகின்றது. அந்தடிப்படையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகவும் , ஆங்கிலேயர்களின் துணிகளை வெளுப்பதற்காக உருவாக்கப்பட்ட பகுதியான சிந்தாதிரிபேட்டை சுகாதார சீர்கேடுகளால் தவித்து வருகின்றது.

சென்னையின் முக்கிய மீன்மார்க்கெட் இப்பகுதியில் இருப்பதினால் , அதனை சரியாக முறைபடுத்துதல் , பராமரித்தல் போன்ற குறைபாடுகளினால் ஏற்படும் இடர்பாடுகளில் அப்பகுதி மக்கள் அவ்வப்போது சுகாதார பிரச்சனைகளில் சிக்கிவருகின்றனர் , தற்பொழுது இதனைவிட அதிகமாக சாக்கடை பிரச்சனை எழும்பிவருவதினால் மலேரியா, டெங்கு போன்ற உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- 

பலவாரங்களாக சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்தின் அருகில்  மக்கள் மிகுதியாக வாழும் அருணாச்சலம் சாலை பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கிவருகின்றது , உரிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் அதிகாரிகளும் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறார்கள். மாநகராட்சி உரிய நடவடிக்கையினை மிகப் பெரும் சுகாதார சீர்கேடு வருவதற்கு முன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-நவாஸ்,புதுப்பேட்டை சென்னை.

Comments