போஸ்டர் ஒட்டுவதில் அதிமுக - சசிகலா ஆதரவாலர்கள் மோதல்.!!

     -MMH

     ஆண்டிபட்டியில் போஸ்டர் ஒட்டுவதில்    அதிமுக-சசிகலா ஆதரவாலர்கள் மோதல். 

சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதற்காக சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோதும் போஸ்டர் தொடர்ந்து ஒட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அதிகளவு அ.தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டுகின்றனர்.

நேற்றிரவு பெரியகுளம் ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் சாந்தகுமார் சார்பில் சசிகலாவை வரவேற்று ஆண்டிபட்டி நகர் பகுதியில் போஸ்டர் ஒட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனி எம்.பி ரவீந்திரநாத் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.கவினர் போஸ்டர் ஒட்டினர்.

சுவரில் இடம்பிடிப்பதற்காக அ.தி.மு.க மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலையில் ஆண்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பையும் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக், தேனி. 

Comments