மக்களுக்காக பண்பாடு மாறாமல்.. பொங்கல் விழாவை நடத்தும் குறிச்சி பகுதி..!!

     -MMH

கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் பெரும் மக்கள் வாழும் பகுதியாக விளங்கி வருகிறது. இந்த நகரம் பகுதியில் கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தொழில்பேட்டை பகுதியாக சிட்கோ விளங்குகிறது. பல தொழில்கள் புரியும் மக்கள் அங்கே தொழில் புரிந்து வருகிறார்கள். மேலும் பல தொழிற்சாலைகளும் அப்பகுதியில் உள்ளது. கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் ஒரு பகுதியாக சுந்தராபுரம் மற்றும் குறிச்சி பகுதி விளங்கிவருகிறது. இந்த அப்பகுதி மக்கள் மிகவும் மரியாதையுடனும் பழகி வருகின்றார்கள். 

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் தை திருநாளன்று இரண்டு நாட்கள் சிறுவர் மற்றும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்காகவும் சில விளையாட்டு போட்டிகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்தி வந்துகொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு ஒரு வருட காலமாக மக்களை ஆட்டிப் படைத்ததால் அதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்து விட்டனர். அந்த நிகழ்ச்சியை மக்களுக்காக மிகவும் உற்சாகத்துடன் குறிச்சி நகர இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இன்று அந்த நிகழ்ச்சியை குறிச்சி பகுதி பெரியசாமி சேர்வை வீதியில் வெகு சிறப்பாக ஆரவாரத்துடனும் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்  கரோனா  பாதிப்பு ஓய்வெடுத்த நிலையில் மிகவும் கவனத்துடனும் பொறுமையுடனும் மக்களுக்காக ஆரவாரம் செய்வதற்காக இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து உற்சாகத்துடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

-கிரி, ஈஷா.

Comments