விசாரணையின் போது உயிரிழப்பு!! - வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு நிதி மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவரை விசாரித்த போது அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜ்குமாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இதை பற்றி விசாரிக்க நாராயணா குரூப் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணை முடித்து 150 பக்கங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை கடந்த மாதம் அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments