கம்பத்தில் டிரோன் முலம் மருந்து தெளிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

 

-MMH

தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் விவசாயிகள் பயிா்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளித்து வருகின்றனா். இதன் மூலம் செலவு பாதியாகக் குறைவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களும், நெல், காய்கறி சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நெல் சாகுபடி முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை நம்பித்தான் நடைபெற்று வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்தால் சாகுபடி பாதிக்கும். ஆனால் தென்னை, திராட்சை, வாழை விவசாயம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தரக்கூடியதாகவும் உள்ளது. ஆனால் இப்பகுதியில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. காரணம் அருகே உள்ள கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் சென்று வருவதால் கம்பம் பகுதி விவசாய நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அப்படியே விவசாய வேலைக்கு ஆட்கள் வந்தாலும் கூலி அதிகமாக வழங்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் கம்பம் பகுதி விவசாயிகள் தற்போது பூச்சி மருந்து தெளிக்க டிரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் விமானத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில், வெங்கடேசன் என்பவா் தனது திராட்சை தோட்டத்தில், திங்கள்கிழமை டிரோன் மூலம் மருந்து தெளித்தாா். இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. இதுகுறித்து திராட்சை விவசாயி கே. முகுந்தன் கூறியது: தற்போது பயிா்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பதால் பரவலாக அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கப்படுகிறது. 

குறிப்பாக வாழை தென்னை நெல் போன்ற பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பதால் குறைந்த நேரம் ஆகிறது அத்துடன் செலவும் பாதியாக குறைந்துள்ளது. வேளாண்மைத் துறையின் இந்த பதிய முயற்சிக்கு உதவ வேண்டும் என்றார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி. 

Comments