யானையின் கோரைப்பற்கள் விற்பனை! பொள்ளாச்சியில் துணிகரம்!

 

-MMH

     பொள்ளாச்சி அருகே, யானையின் கோரைப்பற்களை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் உள்ள துணிக்கடையில், யானையின் கோரைப்பற்கள் விற்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்தபோது, இது உறுதி செய்யப்பட்டது. சேத்துமடையை சேர்ந்த மணியன், 42, துணிக்கடை உரிமையாளர் மோகன்ராஜ், 56, ஆகியோரை கைது செய்து, யானையின் பற்களை பறிமுதல் செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், ''மூன்று நாட்களுக்கு முன், போத்தமடை போயன்காடு பகுதிக்கு சென்ற மணியன், யானையின் எலும்புக்கூடு இருப்பதை கண்டுள்ளார்.

அதில் இருந்து கோரைப்பற்களை எடுத்துள்ளார். பெண் யானை இறந்த அறிக்கை தாக்கல் செய்ய தவறிய, களப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments