நாளை முதல் பேருந்துகள் ஓடாது! போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு!
நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, தமிழக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால் மக்கள் பலனடைந்து வரும் நிலையில், அவ்வப்போது தங்களது கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
5 வருடமாக வழங்காத பஞ்ப்சபடி, ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்களை வலியுறுத்தி முதற்கட்டமாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments