கோவை அடகுக்கடைகளுக்கு காவல்துறை ஆணை! அதிக நகைகளுடன் வந்தால் தகவல் தர வேண்டும்.!!
கார்த்திக் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தனது குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுவிட்டார். வீட்டின் கீழ் தளத்தில் இவரது தாய் வசித்து வருகிறார். மேல் தளத்தில் கார்த்திக் குடும்பத்தினர் வசித்து வருகிறார்.
கார்த்திக் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற நிலையில் திருடர்கள் புகுந்து 100 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் பீரோவில் கொள்ளையர் ஒருவரின் கைரேகை பதிவு கிடைத்துள்ளது. வீட்டில் மோப்ப நாய் மூலமாக துப்பு துலக்காமல் இருக்க முட்டை மசாலா ெபாடியை தூவி சென்றிருந்தனர்.
குறிப்பாக கட்டில், பீரோ, துணிகளில் கொள்ளையர் மசாலா பொடி தூவி சென்றதால் மோப்ப நாயால் மோப்பம் பிடிக்க முடியவில்லை. கொள்ளையரில் ஒருவர் வீட்டிற்குள் சென்றிருக்கலாம். 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வெளிேய காவலுக்கு நின்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த வழக்கில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் 'மிளகாய் பொடி' ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள் பட்டியலை வைத்து தேடுதல் பணி நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அடகு கடைகளில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை உட்பட பல்வேறு பகுதி நகை அடகு கடைகளுக்கு திருட்டு நகைகள் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் அதிக நகையுடன் வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments