போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!!
நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது.
தேனி மாவட்டத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 830 மையங்களில் முகாம் நடந்தது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் இந்த பணியில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 312 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் வடிவேலன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கம்பம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் நேற்று 24 மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது. கம்பம் புது பஸ்நிலையத்தில் நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
- ஆசிக்,தேனி.
Comments