ஜேஇஇ தேர்வு நடைமுறை போல் நீட் தேர்வும் ஆண்டுக்கு இரண்டு முறையா..!!?

     -MMH

     நியூ டெல்லி: தொழில்நுட்ப படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த நடைமுறை கடந்த 2019ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனால் மாணவர்கள் ஒரு முறை தோல்வி அடைந்தால் அடுத்த தேர்வில் வெற்றி பெற்று படிக்க முடியும். இதனால் மாணவர்களின் மன உளைச்சல் குறைகிறது.

இதே நடைமுறை நீட் தேர்விலும் கொண்டுவரப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் இரண்டு முறை நடத்தப்படுவதால் மாணவர்கள் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்புக்கு விண்ணபிக்க முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், தேர்வை அவர்கள் சிறந்த முறையில் எதிர்கொள்ளவும் நீட் இரண்டு முறை நடத்தப்பட உள்ளதாக தேர்வு நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

-சுரேந்தர்.

Comments