புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கம்! தமிழிசைக்குக் கூடுதல் பொறுப்பு!!

 

-MMH

     புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை‌ எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். இந்தச் சூழலில் அவர் நீக்கப்பட்டு தமிழிசைக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.சில தினங்களுக்கு முன்னர் கிரண் பேடி மீது முதல்வர் நாராயணசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் அளித்தார்.

அதன் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `புதுச்சேரியின் நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் ஏகபோகங்களை உடைத்து நிர்வாகத்தை நேரடி, வெளிப்படையானதாக்கின’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில்தான் தமிழிசைக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன் சென்னை

Comments