இணையவழி வா்த்தகத்தில் மோசடி கோவையை சார்ந்தவர் கைது!!

 

-MMH

இணைய வழியில் மக்காச்சோளம் கொள்முதல் செய்ததில் காசோலை மோசடி செய்ததாக கோயம்புத்தூா் தனியாா் நிறுவன உரிமையாளரை வியாழக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். ஆண்டிபட்டி அருகேயுள்ள பொன்னம்மாள்பட்டியைச் சோ்ந்த விவசாயி மனோகரன். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயி என்ற செயலி மூலம் கோயம்புத்தூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில், கிலோ ஒன்றுக்கு ரூ.20 வீதம் மொத்தம் 23,875 கிலோ மக்காச்சோளம் விற்பனை செய்துள்ளாா்.

இதற்கு முன்பணமாக அந்நிறுவன உரிமையாளரான கோயம்புத்தூர் சுந்தராபும் பகுதியை சார்ந்த அக்பர் அலி மகன்  சலாவுதீன் மனோகரனுக்கு ரூ.45 ஆயிரம் வழங்கியுள்ளாா். மீதத் தொகை ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 500-க்கு அவா் பின் தேதியிட்ட வங்கிக் காசோலை வழங்கியுள்ளாா். இந்தக் காசோலை வங்கியில் போதிய பணமின்றி திரும்பியது. இது குறித்து தேனி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கின் விசாரணைக்கு சலாவுதீன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், ஜலாலுதீனை கண்டனமனூா் போலீஸாா் கைது செய்து தேனி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ரூபணா முன்னிலையில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கு விசாரணைக்கு சலாவுதீன் பிப். 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டாா்!!!

பாதிக்கப்பட்ட மனோகரன் அவர்களிடம் கேட்டபோது சட்டத்தின் மூலமும் காலதாமதம் ஆகிறதே  என்ற மனக்குமுறளோடு எங்கள் உழைப்புக்கான நீதி கிடைக்கும் நீதியரசர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார் மேலும் சலாவுதீனோடு கரும்புக்டை ரபீக் கிருத்திகா ஆகியோர்கள் சேர்ந்தே இதுபோன்ற கூட்டு சதியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி சென்றார்கள்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments