திருச்சியில் ஒரு ரவுடி அய்யர்! கோவில் கருவறையைப பூட்டி அடாவடி!!

     -MMH
     திருச்சி மாவட்டத்தில், கோயில் கருவறையைப் பூட்டிய பூசாரி ஒருவர், ரவுடி போல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

திருச்சி தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் வழக்கத்துக்கு மாறாகப் பூசைகள் செய்து வரும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனடியார்கள் கோயிலின் முன்புறம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் விஜயராணி சம்பந்தப்பட்ட அர்ச்சகரை டிஸ்மிஸ் செய்து புதிய அர்ச்சகரை நியமித்தார்.

இந்நிலையில் புதிய அர்ச்சகர் இன்று காலை பூசை செய்வதற்காகத் கோயிலுக்கு வந்தார். அப்போது பணியிலிருந்து நீக்கப்பட்ட அர்ச்சகர் கோயில் சாவியை வைத்துக் கொண்டு புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகரைக் கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

தொடர்ந்து அந்த பதவிநீக்கம் செய்யப்பட்ட பூசாரி கருவறையைப் பூட்டிக் கொண்டு, அங்கு வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாகக் கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் கருவறை பூட்டியிருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். கோயில் அர்ச்சகரே இதுபோல் கருவறையைப் பூட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments