சிங்கம்புணரியில் திமுக சிறுபான்மை அணியினர் எம்எல்ஏவுக்கு வரவேற்பு!

 

-MMH

சிங்கம்புணரியில் ஆண்கள் பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கபாடி போட்டி நேற்று துவங்கியது. 
போட்டியைத் துவக்கி வைக்க வருகை தந்திருந்த திமுகழக மாவட்டச் செயலாளரும், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் அண்ணா மன்றத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். 

அவருக்கு திமுக சிறுபான்மை அணியின் சார்பில் சிங்கம்புணரி பெரிய பள்ளிவாசல் முன்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சிறுபான்மை அணி நிர்வாகிகள் கேபிள் சாதிக், எஸ்.எஸ்.இப்ராஹிம், சேக் அப்துல்லா ஆகியோர் வரவேற்பில் கலந்து கொண்டனர். 
அப்போது ஜமாஅத் தலைவர் ராஜா முகமது அவர்கள் தலைமையில் இஸ்லாமிய இளைஞரணி தலைவர் அயூப் கான், 


இஸ்லாமிய இளைஞர் அணி நிர்வாகி தவ்பீக் மற்றும்  சிங்கம்புணரி ஜமாத்தார்களும் வரவேற்பில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். வரவேற்பு குறித்து பெரியகருப்பன் எம்எல்ஏவும் திமுகவினரும் மகிழ்ச்சி தெரிவித்து, அனைவரும் கபாடி நிகழ்ச்சிக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments