பேருந்துகளில் இலவசப் பயணம், முதியோர்களுக்கு சலுகை!!

     -MMH

     சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியோர் இலவசமாக பயணிப்பதற்கான பஸ் பாஸ் டோக்கன் இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தொடங்கப்படுகிறது.

ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அட்டையைக் காண்பித்து புதிப்பித்துக் கொள்ளலாம்.  புதிதாக பெற விரும்புபவர்கள் உரிய ஆவணங்களைச்  சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை www.mtcbus.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பேருந்து நிலையப் பணிமனைகளில் இலவச பேருந்து பயண அட்டைகளை நேரடியாகச் சென்று  பெற்றுக் கொள்ளலாம் என மாநகரப்  போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் முதியோருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் டோக்கன் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 10 டோக்கன் என ஆறு மாதத்திற்கு வழங்கப்படும்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments