தேவாரம் அருகே மனைவி வெட்டிக் கொலை கணவன் கைது!!

 


-MMH

     தேவாரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை புதன்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா். தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் வடக்கு தெரு, தோட்டத்து வீட்டில் வசிப்பவா் சந்திரன் (49). இவரது மனைவி முனியம்மாள் (39). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். கணவன், மனைவி இருவரும் கேரளத்தில் தோட்டத் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனா்.

கேரளத்துக்கு ஜீப்பில் வேலைக்குச் சென்று வந்த முனியம்மாளின் நடத்தையில் சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடா்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தநிலையில் புதன்கிழமை காலை முனியம்மாள் வேலைக்கு கிளம்பும்போது மீண்டும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்திரன் வீட்டிலிருந்த அரிவாளால் முனியம்மாளை வெட்டிக் கொலை செய்தாா்.

தகவல் அறிந்து வந்த தேவாரம் போலீஸாா், முனியம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸாா், சந்திரனை கைது செய்தனா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி. 

Comments