கும்பகோணம் அருகே பூனையின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்..!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பூனையின் உயிரை காப்பாற்றிய மனிதாபிமானம் மிக்க தீயணைப்பு துறையினர். கும்பகோணம் அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு ஒரு பூனை மின் கம்பத்தின் உச்சிக்கு சென்றது திரும்பி இறங்க தெரியாத அந்த பூனை இரவு முழுவதும் மின்கம்பத்தில் சிக்கி கத்திக்கொண்டே இருந்தது அந்தப் பகுதி மக்கள் இரவு முழுவதும் போராடி பார்த்தனர் மின்னிணைப்பு இருந்ததாலும் இரவு நேரம் என்பதாலும் பொதுமக்களால் பூனையை மீட்க முடியவில்லை விடிந்தவுடன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்தவுடன் மின்சார துறையினருக்கு தகவல் கொடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் கம்பத்தின் மேல் ஏறி தீயணைப்புத் துறையினர் பூனையை மீட்டெடுத்தனர். அப்பகுதி மக்கள் தீயணைப்பு,மின்சார துறை மற்றும் கலைத்துறையினருக்கு நன்றி செலுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.
-வினோத்குமார் கும்பகோணம்.
Comments