கோவை ரயில் நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

     -MMH

     கோவை ரயில் நிலையத்தில்  ஶ்ரீ நாகசக்தி அம்மன் ஆன்மீக அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் உலக புற்று நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் புற்று நோயை தடுப்பது குறித்த விரிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் மலுமிச்சம்பட்டி ஶ்ரீ நாகசக்தி அம்மன் ஆன்மீக அறக்கட்டளை எஸ்.ஆர்.எம்.யு,தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மையம் மற்றும் அகம் நுகர்வோர் தொண்டு நிறுவனங்கள் சார்பில்  புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிலவேம்பு சித்தர்  ஸ்ரீபாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம் யூ கோட்ட செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பயணிகள் மற்றும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அனைவருக்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  சித்தர் பாபுஜி சுவாமிகள்  சிகரட், குட்கா புகையிலை பொருட்களை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் அப்போது தான் புற்றுநோயிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியும் என்று கூறினார். ஏற்கனவே நாகசக்தி அம்மன் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் நித்திய பரிபூரணி கசாயம் என்ற புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் நாகசக்தி அம்மன் ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகள் நாச்சிமுத்து, கே.பி. முருகன், மாதாஜி சரஸ்வதி அம்மாள், பானுமதி,டாக்டர் ரமேஷ் திருக்குமார், ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜமீல் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments