பேருந்து சரியான நேரத்தில் வராததால் சுந்தராபுரத்தில் பள்ளி குழந்தைகள் அவதி...!

 

-MMH 

      க்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால்  கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் செயல்பட தொடங்கியிருக்கின்றன.இந்த சூழ்நிலையில் பேருந்து சரியான நேரத்தில் வராததால்  குழந்தைகள், மிகவும் சிரமத்துடன் மாற்று வழி இல்லாமல் தவிக்கின்றனர். தமிழக அரசு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படாமல் இருப்பதால் பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 

சுந்தராபுரம் பகுதியில் குறித்த நேரத்தில் வர வேண்டிய பேருந்து அரைமணி நேரம் தாமதமாகவும், அரைமணிநேரம் முன்பாகவும் சரியான நேரத்தில் வராமல் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசு பேருந்து 47 மற்றும் 50 காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை பாலம் துறையை நோக்கி செல்லும் பேருந்து மிகவும் தாமதமாக செல்லுகின்றது. இந்த சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை பாலத்துறை செல்லும் இடையில் அலுவலகங்களும், பள்ளிகளும்,தொழிற்சாலைகளும், நிறைய இயங்கி வருகின்றது .அனைத்து மக்களும் இந்த பேருந்தின் தாமதத்தினால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழக அரசு பேருந்து அலுவலகத்தில் கூறியும் கண்டு கொள்வதாக தெரியவில்லை சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்குமா..? பள்ளி குழந்தைகளின் அவதி நிற்குமா ...?

-கிரி, ஈஷா.

Comments