திண்டுக்கல் ஆஞ்சநேயர் சபா ஆண்டு விழா சிறப்பு வழிபாடு!

 

-MMH


திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் சபாவின் 26-வது ஆண்டு விழா 11-ஆம் தேதி வியாழக்கிழமை அதாவது இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று  நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் முன்பு எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேய பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் காலை 6.30 மணிக்கு ஆஞ்சநேய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேய பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவில் முன் மண்டபத்தில் ஆஞ்சநேய பெருமான் தோளில் ராமபிரான் காட்சி அளித்தல் அலங்காரம் நடக்கிறது. இதையொட்டி கண்ணைக் கவரும் வகையில் வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாகல் நகர் ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் சபாவினர் செய்துள்ளனர்.

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments