கோவையில் காட்டுத்தீ அச்சத்தில் கிராம மக்கள்..!!

 

-MMH

      கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால்,மதுக்கரை வனச்சரகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மரங்கள், செடிகள் கருகி வருகின்றன. வறட்சியால் காட்டு தீ ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம இதனால் தீ பரவும் அபாயம் இருக்கிறது.

இதை தொடர்ந்து மதுக்கரை வனப்பகுதியில் தற்போது 6 கி.மீ தொலைவிற்கு தீ தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது. மதுக்கரை வனச்சரகம் நவக்கரை, கரடிமடை என இரண்டு செக்ஷன்களை கொண்டது. இதில், வாளையாறு முதல் கோவை குற்றாலம் வரை உள்ள பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் இருக்கிறது. இப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், மற்றும்கல்லூரிகளில் வனத்துறையினர் காட்டு தீ தொடர்பாக உடனடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

மேலும், வனத்தயொட்டிய கிராமங்களில் வால் போஸ்டர்கள் அடித்தும், மாலை நேரங்களில் தண்டோர போட்டும் பொதுமக்களிடையே பாதுகாப்பு நலன் கருதி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். காட்டு தீ குறித்து கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

மதுக்கரை ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு தீ தொடர்பாக பொதுமக்களிடமும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். காட்டு தீ தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வனத்தில் தீ ஏற்பட்டால் பொதுமக்கள் மாவட்ட வன அலுவலகம் அல்லது வனத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். 

வனத்தில் தீ ஏற்பட்டால் உடனடியாக சென்று தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கால்நடைமேய்ச்சலில் ஈடுபடுபவர்கள், தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து இந்த காட்டுத்தீ பரவலை தடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஈசா கிரி.

Comments