சின்ன வெங்காயம் விலை உயர்வு!

 

-MMH

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை கடந்த 10 நாட்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கோவையில் 170 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு சந்தையில் 130 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் விற்பனையாகிறது. அதிக மழை காரணமாக விளை நிலங்களில் வெங்காயம் அழுகிவிட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

-அருண்குமார். 

Comments