அதிமுக என்ன அலாவுதீன் அற்புத விளக்கா..? கடைசி நேரத்தில் மக்களின் குறைகளை தீர்க்க! ப.சிதம்பரம் காட்டம்.!!

     ஆட்சி முடியும் நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதிமுக கட்சி என்ன அலாவுதீனின் அற்புத விளக்கா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமைத் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் அந்தந்த கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

ஆளும் அதிமுக கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இதையடுத்து இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சி முடியும் தருவாயில் 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால் அதிமுக அரசு பொதுமக்களின் குறை தீர்ப்பார்களாம். குறுகிய காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ போலத்தான். தற்போது அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா, இது அலாவுதீனின் அற்புத விளக்கா தேய்த்தவுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேறுவதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

- ராயல் ஹமீது.

Comments