தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்காக தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு நாளை தமிழகம் வருகை.!!

     -MMH 
     தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையர்கள் நாளை சென்னை வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தலைமை தேர்தல் ஆணையர் 'சுனில் அரோரா' தலைமையிலான குழுவினர் 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகின்றனர். 

முதல்நாளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன்  இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதனையடுத்து  தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் இந்த குழுவினர், பின்னர் புதுச்சேரிக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை  ஆய்வு செய்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

- V.ருக்மாங்கதன், சென்னை

Comments