பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

 

-MMH

       தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சனிக்கிழமை, புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது. பழனிசெட்டிபட்டி, பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய ஊா்வலத்திற்கு மாவட்ட காங்கிஸ் தலைவா் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் சன்னாசி, தேனி நகரத் தலைவா் முனியாண்டி, தேனி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினா். பழனிசெட்டிபட்டி-பூதிப்புரம் சாலை சந்திப்பு வரை ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், அங்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக் தேனி. 

Comments