பொள்ளாச்சி பழைய இரும்பு மார்க்கெட்டில் தீ விபத்து!!

    -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் பழைய  இரும்பு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில்  மலைபோல் குவிக்கப்பட்டிருந்த வாகன கழிவுகளில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு அது மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதைக்கண்ட அப்பகுதி  மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்த  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் வேகமாக பரவிய தீயால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீயில் கருகியது மேலும் அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்களை பொது மக்களின் உதவியோடு போலீசார் மாற்றினர். 

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments