கேரளாவில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கி விட்டது.!!

     -MMH

கேரளாவில் இன்னும் ஒரிரு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில்  சபரிமலை ஐயப்பன் கோவில்  விவாகரத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பெண்களை நுழைய அனுமதி அளித்தது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 

அதன்பிறகு சபரிமலையில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த அமர்வு அளிக்கும் தீர்ப்பை அமல்படுத்துவது என கம்யூனிஸ்ட் அரசு முடிவில் உள்ளது.

இதனிடையே காங்கிரஸ் தலைமையிலனா கூட்டணி தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோயிலின் மரபுகளை மீறுவது குற்றம் என்று சட்டம் கண்டிப்பாக கொண்டு வருவோம் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வர தடை விதிப்போம் தடையை  மீறினால் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வருவோம் என காங்கிரஸ் உறுதி  அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் கேரளாவில் சட்டசபை தேர்தல் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு. 

Comments