தேனியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திமுக ஆர்பாட்டம்!!

     -MMH
     தேனியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி-மதுரை சாலையில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில் மாட்டு வண்டியில் ஊா்வலமாக சென்ற திமுகவினா், பங்களாமேடு திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் சரவணக்குமாா், திமுக முன்னாள் மாவட்டச் செயலா் எல்.மூக்கையா, போடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் நா.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.மகாராஜன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆசையன், திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments