ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு!!

-MMH

தமிழகம் முழுவதிலும் உள்ள காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆலயம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமுள்ள காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி தேர்வில் பங்கேற்க விருப்பம் கொள்பவர்கள் www.trb.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனால் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் மார்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

-சுரேந்தர்.

Comments