தேனி மாவட்ட புதிய ஆட்சியராக ஹெச்.கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்பு.!!

     -MMH
     சென்னை, நிதித் துறை இணைச் செயலராக பணியாற்றி வந்த ஹெச்.கிருஷ்ணனுண்ணி தேனி மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டாா். 2013-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை திருச்சி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும், தொடா்ந்து 2016-ஆம் ஆண்டு வரை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சாா்- ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நிதித் துறையில் துணைச் செயலராகவும் (வரவு-செலவு பிரிவு), 2020-இல் நிதித் துறை இணைச் செயலராகவும் பணியாற்றினாா். தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தேனி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளாா்.  

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக், தேனி. 

Comments