சிங்கம்புணரியில் உலகத் தாய்மொழி நாள் விழா!

 

-MMH

     உலகத் தாய்மொழிகள் நாளை முன்னிட்டு, தமிழே கல்விமொழி, ஆட்சி மொழி, அலுவல் மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தாய்மொழி நாள் பரப்புரை சிங்கம்புணரியில் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்க சின்னப்பத் தமிழர் தலைமை தாங்கினார். பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கர்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் ஒப்புரவாளன், பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சமீ.ராசகுமார், வழக்குரைஞர் எழிலரசன், கம்பூர் செல்வராஜ், பெரியார் கண்ணன், ம.து.ராஜ்குமார், பறம்புமலை பாதுகாப்பு இயக்க உறுப்பினர் பாரூக் முகமது மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தியும், தமிழை முழுமையான அலுவல் மொழியாகப் பயன்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments