இந்தியாவிலேயே முதன் முறையாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தகவல்கள் இனி SMS மூலம்! கோவையில் அசத்தல்!!

 

-MMH 

        


ந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்திற்க்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை துவக்கியுள்ளது. இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employee's Provident Fund) திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.

இந்த தொகை பற்றி தெரிந்து கொள்ளவதற்கும், இதனை பெற்று செல்வதற்கும் தினந்தோரும் ஏராளமான வாடிக்கையாளர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சார்பாக தடையற்ற சேவைகளை வழங்குவதற்கு ப்ரீடம் 2021 என்ற எஸ்எம்எஸ் அடிப்படையிலான முன்பதிவு செவையினை கோவை பெருமண்டல கூடுதல் மத்திய ஆணையாளர் மதியழகன் துவக்கி வைத்தார்.

இந்த சேவை மூலம் பயாணிகள் வர விரும்பும் தேதியை தேர்ந்தெடுக்கலாம்,அதே போல ஒரு மாதத்திற்கு முன்பே வருகையின் தேதியை  முன் பதிவு செய்யலாம் எனவும் 9220592205 மூலம் முன் பதிவு செய்தால் நாம் வரவேண்டிய தேதியை முடிவு செய்து எஸ்எம்எஸ் மூலம் தங்களுக்கு வந்து சேரும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல முதன்மை ஆணையாளர் ஐயவதன் இங்லே, பெருமண்டல ஆணையாளர் முத்து செல்வன், உதவி ஆணையாளர் சுரேஷ், மத்திய ஆணையாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-சீனி,போத்தனூர்.

Comments