கோர விபத்து! ஒரே இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணம்! விபத்தில் சிக்கி 5 பேர் பலி!

 

-MMH

                               பெரம்பலூர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் இரு சக்கரவாகனத்தில் பயணித்த 5 பேர் உயரிழந்துள்ள சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் புது காலனியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தனம்(55). பாண்டியன் தனது மனைவி, மகன் மற்றும் மகள் என 5 பேர் தங்களது உறவினரின் வீட்டிற்கு ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பும் போது சிறுமி ஒருவரும் அவர்களுடன் வருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். 6 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கொளப்பாடி கிராமத்திலிருந்து வேப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுக்கொண்டிருந்தனர். 

இச்சிலிக்குட்டை எனும் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, வேப்பூரிலிருந்து வேட்டக்குடி நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரை வேகமாக ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.இருவர் மருத்துவமனையில் உயிழந்ததாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் குறித்து, குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாரூக்.

Comments