மரபணு பாதிப்பால் தவிக்கும் 8 மாத பெண் குழந்தை!! - உதவிக்கரம் நீட்டுவார்களா.. நல்ல உள்ளங்கள்!!

     -MMH
     கோவை போத்தனூர் அம்மன்நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் அப்துல்லா ஆயிஷா. இவர்களில் 8 மாத பெண் குழந்தைக்கு மரபணு பாதிப்பால் ஏற்படும் அரிய வகையான S M A என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.

 பாதிக்கப்பட்ட குழந்தை இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்கும் என்ற நிலையில்  குழந்தையை காப்பாற்ற உடலில் இல்லாத மரபணுவை உடனடியாக  ஊசியின் மூலம் குழந்தைக்கு செலுத்த வேண்டுமென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஊசியின் விலை இந்திய ரூபாய்  மதிப்பில் கிட்டத்தட்ட 16 கோடி. அமெரிக்காவில் இருந்து தான் இந்த ஊசியை கொண்டு வரவேண்டும் என்ற நிலையில் குழந்தையை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் தவிக்கின்றனர். இவ்வளவு பெரிய தொகையை எப்படி சேர்ப்பது என தெரியாமல் பெற்றோர்கள் போராடி வருகின்றனர். குணமும் பணமும் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள் என்ற  எதிர்பார்ப்புடன்.

-நிருபர்கள் குழு, கோவை.

Comments