தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!!

-MMH

       ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,10,96,731 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,75,169 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,051 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புகள் பத்தாயிரத்துக்கு குறைவாகவே இருந்து வந்த நிலையில் ,தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், புதிதாக உருவான மொத்த பாதிப்பின் 6 மாநிலங்களில் மட்டும் இருந்து மட்டும் 86.37% பாதிப்பு பதிவாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-கிரி தலைமை நிருபர்.

Comments