சிங்கம்புணரியில் காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம்!

 

-MMH

            டைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்தக் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரியில் பேண்டு வாத்தியங்களோடு கிருங்காகோட்டை சந்திப்பிலிருந்து, காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு முனை சந்திப்பு, சேவுகமூர்த்தி கோவில், சீரணிஅரங்கம், பெரியகடைவீதி வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் சென்று இறுதியாக  கிருங்காகோட்டை சந்திப்பு சாலைக்கு மீண்டும் வந்தடைந்தது.

கொடி அணிவகுப்பிற்கு திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ரகு தலைமையில் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) வரதராஜன், எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் டேவிட், சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன், சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உலகம்பட்டி காவல் ஆய்வாளர் கலாராணி ஆகியோருடன் காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் 200க்கும் அதிகமானோர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.

Comments