தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் தங்க பத்திர சேமிப்பு திட்டம்!!

      -MMH

     பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் தங்க பத்திர சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

நடப்பாண்டிற்கான தங்க பத்திர சேமிப்பு திட்டம் 1ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்கத்தை  குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம் வரை முதலீடு செய்யலாம் 1 கிராம் தங்கத்தின் விலை 4662 ரூபாய் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் தேவை ஏற்பட்டால் 5 ஆண்டுகளுக்குப்பின் முன் முதிர்வு செய்துகொள்ளலாம் மேலும் ஆண்டு வட்டியாக 2.5 சதவீதம் வழங்கப்படும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் தங்க பத்திரத்தின் பேரில் கடன் பெறலாம் மேலும் கூடுதல் விவரங்களுக்கு 

97888 15985, 04259 224656 என்ற எண்களை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம் 

இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு,வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments