செங்கல் வியாபாரிகளின் குமுறல் கண்டுகொள்ளுமா அரசு..!!
கோவை மாவட்டம் கணுவாய் தடாகம் பகுதிகளில் சுமார் 190 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் பயன்பாட்டில் இருந்து கொண்டே இருக்கின்றன .கடந்த சில நாட்களாகவே இந்த செங்கல்சூளை களை அரசு மூடி உள்ள நிலையில், இதில் பணிபுரியும் செங்கல் வியாபாரிகள் உட்பட, கூலி தொழிலாளிகள் வரை. வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கும் நிலையில் காணப்படுகிறது.
190 செங்கல் சூளைகளில் பணி புரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் பஞ்சர் கடை முதல் ,டீக்கடை வரை, லாரி சர்வீஸ் கடை முதல், உணவு விடுதி வரை. கணக்கெடுத்துப் பார்த்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த 'செங்கல் சூளை நம்பி வாழ்வதாகவும்'
இந்நிலையில் கடந்த நாட்களாகவே தொழில் முடக்கம் ஏற்பட்டு என்ன செய்யப் போகிறோம். என்ற நிலையில் வாடும் இந்த நிலை நீடித்தால் அந்தப் பகுதியை காலிசெய்துவிட்டு, முற்றிலும் செங்கல் தொழிலை செய்யமுடியாத நிலை ஏற்படும் என்றும்.
இப்படிப்பட்ட சூழ்நிலை தொடர்ந்து நிலவினால், செங்கல் தொழில் முற்றிலும் அழிந்து விடும் என்று கூறுகின்றனர். செங்கல் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், அரசு நல்ல ஒரு முடிவை எடுத்து தர வேண்டும் .என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளயவரலாறு செய்திக்காக,
-கணேஷ்,ஈசா,கிரி.
Comments