வெளியூர் செல்லும் மக்கள் அவதி!!

     -MMH

     கிணத்துக்கடவு மேம்பாலத்தில், அரசு விரைவு பஸ்கள் செல்வதால், வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலை பணியில், கிணத்துக்கடவில், மேம்பாலம் கட்டப்பட்டு, வாகனங்கள் மேலே செல்கின்றன.

இதில், சில தனியார் பஸ்களுக்குள் போட்டி ஏற்படும்போது, கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் ஒரு பஸ் சென்றால், பின் தொடர்ந்து வரும் மற்றொரு தனியார் பஸ் மேம்பாலம் வழியாக சென்று, அடுத்த ஸ்டாப் ஆன, ஒத்தக்கால்மண்டபத்தில் பயணிகளை ஏற்றுகிறது. மேலும், இரவு நேரங்களில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி போன்ற ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மேம்பாலம் கட்டாதபோது, கிணத்துக்கடவுக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்று வந்தன.

மேம்பாலம் கட்டிய பின், அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவுக்குள் வருவதில்லை. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வெளியூர் பஸ்களுக்காக, பொள்ளாச்சி அல்லது கோவை செல்கின்றனர். இந்த சிரமத்தை குறைக்க, கிணத்துக்கடவு பஸ்ஸ்டாண்டிற்கு அரசு விரைவு பஸ்கள் வந்து செல்ல வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொ்டாமுத்தூர்.

Comments